வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இன்று (16) அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டம் அரச அதிபரின் புஸ்பகுமார நெறிப்படுத்தினார். மாவட்டத்தின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில்  இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் சிலப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளும் காணப்பட்டன.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கு கொண்டனர்.
IMG_4925 IMG_4905 IMG_4921