Breaking
Sun. Dec 7th, 2025
முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வலை வீசிய போது, மிகவும் அரிதான வகையிலான ஆனைத்திருக்கை அகப்பட்டுள்ளது.
மீனவர்கள் தமது படகை பருத்தித்துறை இறங்குதுறையில் நிறுத்தி ஆனைத்திருக்கையை துண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
அரிதான வகை திருக்கை மீனான ஆனைத் திருக்கை கடலின் ஆழப்பகுதியில் இருப்பதாகவும், முதன்முதலாக இவ்வாறு மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதென்றும் அம்மீனை சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்கமுடியுமென்றும் யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் மேலும் கூறினார்.

Related Post