சோமவன்சவின் பூதவுடலை உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவு

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் பூதவுடலை, அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வெலிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

காலமான, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள, பூதவுடலை தம்மிடம் கையளிக்குமாறு உறவினர்கள் முன்வைத்த கோரிக்கையையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளது.