தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவு

இலங்கையின் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (16) நள்ளிரவு முதல் நிறைவுக்கு வந்ததாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.