வர்த்தக நிலையத்தில் தீ விபத்து : ஒருவர் பலி

மாரவில – முதுகடுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் குறித்த கட்டிடமும் சேதமடைந்துள்ளது.

குறித்த நபர் குளிர்சாதன பெட்டியை பழுது பார்துக்கொண்டிருக்கும் போது, குளிர்சாதன பெட்டியின் காற்று அழுத்தி வெடித்ததன் காரணமாகவே தீ பரவியுள்ளது.

இதன்பின்னர், காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.