வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டங்கள்

வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக குறித்த வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல நகரங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று கிரிபத்கொட, கடவத்த, மாகொள, களனி ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நகரங்களின் வர்த்தகர்கள் நடைபயணத்தை மேற்கொண்டு கிரிபத்கொட சந்தி வரை சென்று அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.