பேராதனை பல்கலைகழக ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்தப் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (3) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த கண்டி மாநகர சபையின் தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர்.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.