அடையாளம் காட்ட உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்தனர் என்று சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவரின் மாதிரி வரைபடங்களை பொலிஸ் தலைமையலுவலகம் வெளியிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சாட்சியாளர்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் ஓவிய நிபுணர்களால் இந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் இந்த உருவ அமைப்பை ஒத்தவர்களை காணுமிடத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குமாறும் பொது மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது.

article_1467687438-b article_1467687455-a