Breaking
Fri. Dec 5th, 2025

ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று (8) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வட் வரி அதிகரிப்பு மற்றும் பல விடயங்களுக்காக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அமைச்சர் உள்ளிட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post