Breaking
Fri. Dec 5th, 2025

– அபூ ஷஹ்மா –

காத்தான்குடி முதலாம் குறிச்சி, பிரதான வீதி, அந் நாஸர் வித்தியாலயத்திற்கு அருகே நேற்றிரவு திடீரென நடப்பட்ட பேரீத்தமரம் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது.

இந்த மரம் திடீரென அவ்விடத்தில் முழைத்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

அத்துடன் இம்மரம் வீதிப் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாகவும் இதை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் கேட்டுகொண்டதற்கிணங்கவே எடனடியாக அது அகற்றப்பட்டது.

கடந்த நோன்புப் பெருநாள் இரவில் இப் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் தனிப்பட்ட முரண்பாடு மற்றும் கை கலப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post