Breaking
Fri. Dec 5th, 2025

-கலாபூசணம் – மீரா.எஸ்.இஸ்ஸடீன் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 96/97 கல்வி ஆண்டில் கல்வி கற்று 2002ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலை,கலாசார பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களின் குடும்பத்துடனான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 2016.07.16ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00மணி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில்; பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க உத்தியோக பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற உள்ளது. இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் ஏனைய அதிதிகளாக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

எனவே 96/97 கல்வி ஆண்டின் மாணவர்கள் அனைவரும் தங்களது குடும்ப சகிதம் கலந்து இந் நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு பீ.எம்.அர்சாத் 0772326475 ,0714417859 உடன் தொடர்பு கொள்ளவும்.

By

Related Post