Breaking
Sat. May 18th, 2024
தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவினை பெற்று பொது வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாதுலுவே சோபித தேரர் முயற்சிக்கின்றார்.
எனினும், இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சோபித தேரர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்.
தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
சோபித தேரருக்கு அரசியல் அனுபவம் கிடையாது எனவே வேறும் நபர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.
ஜனாதிபதி தேர்தல் நடாத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும். அரசியல் சாசனத்தில் அதற்கு இடமுண்டு.
நாடாளுமன்ற ஆட்சி முறைமை ஒன்றை நிறுவுவதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய முடியும்.
சட்டங்களை உருவாக்கும் மற்றும் சட்டங்களை மாற்றியமைக்கும் அதிகாரம் நீதிமன்றிற்கு காணப்படுகின்றது.
சட்டத் திருத்தங்களின் மூலம் ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதியின் பதவிக் காலம் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க முடியும்.
ஜனாதிபதிக்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனவே நாடாளுமன்றின் ஊடாகவே திருத்தங்களை மேற்கொண்டு மாற்றங்களைச் செய்ய முடியும் என பெட்டி வீரக்கோன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *