Breaking
Fri. Dec 5th, 2025

அரச அச்சுத் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தினால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அச் சங்கத்தின் செயலாளர் சரத் லால்பெரேராவால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் முன்னாள் மேலதிக அச்சகர் இணைந்து பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு, திணைக்களத்தில் உரிய நிர்வாகம் இன்றி அரசியல் நோக்கங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையை அனைவரும் அறிவோம் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போதும் முன்னாள் மேலதிக அச்சகர் அமைச்சில் இருந்து, அங்கு பல்வேறு மோடிகளில் ஈடுபடுவதோடு, அமைச்சு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அரசியல் உதவிகளை வழங்கி அதனை மறைக்க முற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில் ஊழியர்கள் வீதியில் இறங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post