Breaking
Fri. Dec 5th, 2025
வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு இதுபற்றிய ஆலோசனையை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பதுளை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா, அற்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை விடுத்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வருமான வழிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால் வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைகளையும் தாம் வழங்கியிருப்பதாக அமைச்சர் கூறினார்.
அடுத்த மாதத்திலிருந்து உள்ளூராட்சி சபைகளின் வருமானத்தை 25 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

By

Related Post