Breaking
Fri. Dec 5th, 2025
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என  மகிந்த தலைமையிலான குழுவினர் கனவு காண்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
பாதயாத்திரை செல்வதாலோ அல்லது பொது எதிரணியினரை அமைத்து கூச்சல் போடுவதாலோ ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்தவும் அவரது புதல்வர்களும் அவர்களை சுற்றியுள்ள கூட்டணியினரும் கனவு காண்கின்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது.
பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் தஞ்சம் கோரி நிற்கும் இவர்கள் அனைவரும் முன்னைய அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்கள். இவர்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கும் விரைவில் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

By

Related Post