ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

குருநாகல் நகரபிதாவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கைக்கு அமைய நடுநிலைமையுடன் செயலாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.