Breaking
Fri. Dec 5th, 2025
கொழும்பில் நவீன சாதி முறைமை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த காலங்களில் சாதி முறைமை காணப்பட்ட போதிலும் பின்னர் அது வழக்கொழிந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது கொழும்பு போன்ற பகுதிகளில் நவீன சாதிய முறைமை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தாய் பாலியல் தொழிலாளி என்றால் மகளையும் பாலியல் தொழிலாளி என்ற பிரிவிற்குள்ளும், தந்தை முச்சக்கர வண்டி செலுத்தினால் மகளனும் அதே முசக்கர வண்டி ஓட்டுகின்றனர் பிரிவிற்குள் உள்ளடக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சேரிகளில் வாழ்ந்து வரும் மக்களிடையே இந்த நிலைமை காணப்படுகின்றது என குறிப்பிட்ட  அவர், மக்களின் வறுமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post