அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த சீனத் தூதர்

அஸ்கிரிய மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய ஞானரத்ன தேரரை இலங்கைக்கான சீனத் தூதர் எச்.ஈ. ஈஜான்லியாங்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு கண்டியில் இடம்பெற்றுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக தெரிவுசெய்யப்பட்டமைக்கு தூதர் வாழ்த்துத் தெரிவித்ததுடன்  சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன் போது இரு நாடுகளுக்கிடையிலான பௌத்த உறவுகள் தொடர்பில் பேச்சுவார்ததை நடத்திய சீனத் தூதர், தலதா மாளிகைக்கான கழிவறைத் தொகுதியை நிர்மாணிக்க சீனா உதவியளிப்பதாகவும் தெரிவித்தார்.