Breaking
Fri. Dec 5th, 2025

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது இரு பிரதான கட்சிகளை உள்ளடக்கி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விடுத்து இனவாதத்தை தூண்டி பாதயாத்திரை எனும் பெயரில் கட்சியை பிளவுப்படுத்த நினைக்கும் எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை என மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மேலும் பாதயாத்திரை எனும் பெயரில் மக்களை திசைத்திருப்பி தனிப்பட்ட சில நபர்களுக்காக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பது சிகையழங்கார நிலையம் போன்றது. தனிப்பட்ட நோக்கங்களுக்காக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒருநாள் நிச்சயம் திரும்பி வருவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

By

Related Post