Breaking
Fri. May 3rd, 2024
தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பில் பன்னாட்டு ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கை முதலிடம் பெற்றது.
121 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித்த மகிபால தெரிவித்தார். இலங்கையில் பாலுாட்டும் தாய்மார் தற்போது 92 வீதமாகக் காணப்படுகின்றனர். குழந்தைகளுக்கான
பால்மா தொடர்பான பல்வேறு விளம்பரங்களால் இந்த வீதம் குறைவடைகின்றது. அனைத்துத் தொழில் நிறுவனங்களும்  தமது ஊழியர்களுக்கு பாலுாட்டுவதற்கான நேரத்தை வழங்க வேண்டும் என்று பாலித்த மகிபால குறிப்பிட்டார்.
இந்த ஆய்வில் கியுபா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு 51 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்விலும் இலங்கையே முதலிடம் பெற்றிருந்தது. இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து 7ஆம் திகதி வரை தேசிய பாலுாட்டல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *