Breaking
Fri. Dec 5th, 2025

மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்ட இரண்டு மாதங்களில் குறித்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அலங்கார மீன் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடத்தில் மாத்திரம் 2400 மில்லியன் ரூபா அரசுக்கு  வருமானம் கிடைத்துள்ளதாகவும், அடுத்துவரும் வருடங்களில் இதனை அதிகரிக்க  எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

By

Related Post