Breaking
Fri. Dec 5th, 2025

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல் அளித்துள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.

கடந்த 09ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் பொலிஸ் மா அதிபரினால் அதற்கான அங்கிகாரம் வழங்கப்படாதிருந்து வந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது.

1979ஆம் ஆண்டு, உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்த எம்.ஆர்.லத்தீப், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post