Breaking
Fri. Dec 5th, 2025

சுகாதார அமைச்சுக்கு மற்றுமொரு பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது அரசாங்கத்தின் தீர்மானம் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.

நான்கு அமைச்சுக்களுக்கு இவ்வாறு பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.

சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை ஆகிய அமைச்சுக்களுக்கு இவ்வாறு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.

அத்துடன் அந்த அமைச்சுக்கள் 100 பில்லியன்களுக்கு அதிகமான செலவுகளை மேற்கொள்வதனால் அதற்காக நிதி மற்றும் கணக்கியல் சம்பந்தமான பணிப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

எனினும் இந்தப் பதவிகளுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.
– அத தெரண –

By

Related Post