சாதாரண தரப் பரீட்சையில் ஆக்ககூடிய புள்ளிகளைப் பெற்ற 12 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற 12 மாணவர்கள் இன்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களையும் விருதுகளையும் பெறவுள்ளனர்.
இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என கல்வியமைச்சின் பாடசாலை அலுவல்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டபிள்யு.கே.எம்.விஜயதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை வருடந்தோறும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு.விஜயதுங்க கூறினார்.
இன்றைய பரிசளிப்பு விழாவில் கல்வியமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்பார்கள். இதற்கு மக்கள் வங்கியும் தனியார் நிறுவனங்களும் அனுசரணை வழங்கியுள்ளன.