ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய இரண்டாவது சந்தேக நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்தை ஊடுறுவியதாக கூறப்படும் இரண்டாவது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதான மொரட்டுவை பகுதியினைச் சேர்ந்தவரென குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்தனர்.

குறித்த கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று (30) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்  தெரிவித்தனர்.