ஜனாதிபதியின் இணையத்தளம் முடக்கம்: மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப உத்தரவு!

ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்று (29) கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் மொரட்டுவையில் கைதுசெய்யப்பட்ட 27 வயதானவரை செப்டம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இணைத்தளம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.