கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

