குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகருக்குள் குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசி எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதிலும் வாகனங்களில் செல்லும்போது வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.

குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசுவதால் தொற்று நோய்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.