Breaking
Fri. Dec 5th, 2025

-சுஐப் எம்.காசிம் –

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நாளை காலை (02/09/2016) கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கம் கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்தும், நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்துவார் எனவும்  நம்பப்படுகின்றது. .

இந்த சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post