நல்லிணக்கத்திற்கான கால வரையறை விதிக்கவில்லை

இலங்கையில் நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான கால வரையறையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக நீடித்த யுத்தத்தில் இருந்து மீளுவதற்கு கால அவகாசம் தேவை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆகவே இதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.