Breaking
Fri. Dec 5th, 2025

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில், சனிக்கிழமை (03) மாலை, காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவெம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர், ஈரக்குளம் கிராமத்துக்கு  சைக்கிளில் சென்றுவிட்டு, சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அருகே உள்ள வயல்பாதையூடாக மாவடிவெம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, குறித்த பாதைக்கு குறுக்கான வந்த காட்டுயானை, இவர்களை தாக்கியுள்ளது.இச்சம்பவத்தில் சகோதரிகள் இருவரும் காயமடைந்த நிலையில், மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஷர்மிலா என்ற 11 வயதுடைய சிறுமி,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறு காயங்களுக்குள்ளான அவரது தங்கை தொடர்ந்து மாவடிவெம்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post