ஒற்றையாட்சி முறைமைக்குள் புதிய அரசியலமைப்பு

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒற்றையாட்சி முறைமைக்குள்  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற விசேட பிரேரணை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையை தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்தார். இதன்போது ஏழு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பாதுகாக்கும் செயற்திட்டத்தை பாராட்டியும், இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்தல், இன நல்லிணக்கம் ஏற்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதன்போது அமைச்சர்  பிரேம்ஜயந்த மேலும்  உரையாற்றுகையில்,

ஒற்றையாட்சிக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் . ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இதன்பிரகாரம் ஒற்றையாட்சிக்குள் அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும் என்றார்.