இலங்கை போக்குவரத்து சபை தனியார்மயப்படுத்தப்படமாட்டாது.

இலங்கை போக்குவரத்துச் சபையை எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபயசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில இன்று(8) பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு  அமைச்சர் பதில் அளிக்கையிலேயே இந்;;த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சேவை தேசிய சொத்தாகும் இதனால் எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.