Breaking
Sat. Dec 6th, 2025
இலங்கையின் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து கொழும்பு புறப்பட்ட விமானமே இவ்வாறு நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் ஓர் என்ஜின் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எயார்பஸ் ஏ320 ரக விமானமே இவ்வாறு இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது.
இந்த விமானத்தில் 142 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே இயந்திர கோளாறை கண்டு கொண்ட விமான ஓட்டி மீளவும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கியுள்ளார்.
இதனால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Post