மஹிந்தானந்தவின் மகன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் கனிஷ்க பண்டார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.