விமல் வீரவன்ஸ FCID இல் ஆஜர்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ விசாரணைகளுக்காக இன்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக வீரவன்ஸ இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விசாரணைகளுக்காக கடந்த 14ஆம் திகதியும் விமல் வீரவன்ஸ பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.