துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 28ஆம் திகதி திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெய மேலும் தெரிவித்துள்ளார்.