Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கை வரலாற்றில் என்றுமே இடம்பெறாத புதிய சாதனை ஒன்று கோத்தபாய ராஜபக்சவினால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அண்மையில் எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் போது கோத்தபாயவின் சார்பில் 60 வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒருவருக்காக அதிக வழக்கறிஞர்கள் ஒரே தடவை நீதிமன்றத்திற்கு வருகை தந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கோத்தபாயவினால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கை வரலாற்றில் என்றுமே இடம்பெறாத புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த வழக்கு இடம்பெற்ற போது அன்றைய தினம் மொத்தமாக 100 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாகவும் அதில் 60 பேர் கோத்தபாயவிற்காக வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post