அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் மரணம் குறித்த அனுதாபச் செய்தி

01.11.2016

அகில இலங்கை ஜமிய்யதுல் உலாமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் அகால மரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமான என்னையும் எமது கட்சியின் உறுப்பினர்களையும் பெரும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கை திரு நாட்டிலே தஃவா பணியில் தன்னை அர்பணித்த அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் பின்னால் நின்று அவரின் தஃவா விருட்சத்தின் வேராக  இருந்து பெரும் தியாகங்களையும் பங்களிப்புகளையும் செய்த அந்த பெண்மணியின் மரணசெய்தி இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பெரிதும் படிப்பினையாக அமைகிறது. அன்னாரின் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்சை வழங்கி, அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பொறுமையையும் வல்ல நாயன் அல்லாஹ் வழங்குவானாக!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் அரச பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதால் அமைச்சர் சார்பாகவும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்