கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் அண்மையில் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலக செயலாளர் திருமதி தெட்சணகெளரி தினேஷ் ,பனை அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்ணன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.


