அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்கேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி அவர்கள்; துருக்கியில் நடைபெறும்  அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கலந்துகொள்ள  நேற்று (28)  துருக்கிக்கு பயணமானார்.