Breaking
Sun. Jun 16th, 2024
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் எழுச்சிக்காகவும் அதனை ஒரு தகுதிசார் தொழில் துறையாக முன்னெடுப்பதற்கு இலங்கையில் தொழில்முறை மேலாண்மை அங்கீகாரம் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த அங்கீகாரம்சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக்  கணக்கியல் நிறுவனத்திற்கேவழங்கப்பட்டது
 
இவ் அங்கீகாரத்திற்கான அங்குரார்ப்பண அமர்வானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் மற்றும் அதன் தகுதியினை பெற்ற சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதிமற்றும் மேலாண்மைக்  கணக்கியல் நிறுவனத்தின் தலைமையில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது.
 
சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக்  கணக்கியல் ஒரு மூன்று ஆண்டு திட்ட கூட்டு அமர்வில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத அலுவல்கள்  அமைச்சர் ஜோன் அமரதுங்கவும்  கலந்துக்கொண்டார்
 
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: புதிய சான்றிதழின் நிமித்தம் விருந்தோம்பல் துறை தகுதிவாய்ந்ததொழில் துறையாக  திகழும். இலங்கையில் விருந்தோம்பல் தொழிற்துறை மூன்றாவது மிகப் பெரிய அந்நிய செலாவணியை ஈட்டுவதுடன் வளரும் ஒரு துறையாக இருக்கிறது. சுற்றுலாத் துறை உலகின் குறைந்தளவு செலவில் அதிகலாபம் தரும் துறையாக உலகம் பூராவும் உணரப்பட்டுள்ளது.    இலங்கையின் பொருளாதாரத்தினுள் அந்நிய செலாவணி உழைப்பதில் பிரதான துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. இலங்கைக்கு அந்நிய செலாவணியினை இலகுவாகபெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக உள்ள துறையாக முக்கியத்துவம் பெறுகின்றது. 2020 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 3.5 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விருந்தோம்பல் துறையில் நேரடிதொழிலுக்கு 250,000 பேர் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இயங்குகின்றது.   விருந்தோம்பல் துறைக்காக சிறப்பு வாய்ந்த நிதி மற்றும் மேலாண்மைக் கணக்கியல் திட்டத்தினைஇலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமும் இணைந்து அறிமுகம் செய்தது. நிதி மற்றும் மேலாண்மை கணக்கியல் துறை மீது இவ்விரு நிறுவனங்களுக்கடையிலான முயற்சியானது  தகுதிவாய்ந்ததிறமையான தொழில்நெறிஞர் மத்தியில் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுதல் விருந்தோம்பல் துறை பாராட்டுக்குரியது. முடிவெடுத்தல் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக் கான  நிதி மற்றும் மேலாண்மை செலவுகண்டறிந்து கொள்வதற்கு சிரேஷ்ட நிர்வாக மட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த நிகழ்ச்சி திட்டம் நன்மையானது என்றார் அமைச்சர் ரிஷாட்.
 
இலங்கை பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்தின் பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வட்டவளை இந் நிகழ்வில் உரையாற்றும்  போது தெரிவித்ததாவது: இலங்கையில் சுற்றுலா துறையின் அதீத விஸ்தரிப்புக்கு சான்றளிக்கப்பட்டவிருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக்  கணக்கியல்   முக்கியமானது. இலங்கையில் முதலாவது தொழில்முறை தகுதி பெற்ற இக்கணக்கியல் நிறுவனத்திற்கு இரண்டு நிறுவனங்கள் கூட்டாக  சேர்ந்து வழங்கப்படும் தகுதியாகஉள்ளது. கொழும்பில் அண்மையில் நடைபெற்ற  மனிதவள மாநாட்டில் பெரிதும் சுற்றுலா துறை மனித வள மேம்பாட்டுக்கு அதிக  கவனம் செலுத்தப்பட்டது  என்று கூறினார்.

By

Related Post