முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றினார். அமைச்சர் றிஷாத் பேசியவை பின்வருமாறு.
“இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகின்ற மதத்தை பின்பற்றவும், மத கடமைகளை நிறைவேற்றவும் அணுமதிக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளும் இன வாத அமைப்புகளுக்கும் சோரம் போகும் வகையில் தெஹிவலை பள்ளிவிடயத்தில் நடத்துகொண்டமையையிட்டு மிகவும் கவலையடைந்ததுடன் இந்த தெஹிவல பள்ளி மற்றும் மத்ரஸா சட்ட பூர்வமாக நிர்மாணிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் ஹன்ஷாட்டில் இனைக்கும்படி வேண்டிக்கொள்கின்றேன்.”
“ஒரு சில இனவாதம் பேசுகின்றவர்கள் முஸ்லிம்கள் ஏதோ பயங்கவதாதிகள் போன்று சித்தரிப்பதுடன் முஸ்லிம்களுடைய மத கடமைகளையும் செய்யவிடமாமல் தடுப்பது ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமை மறுக்கப்படும் செயல்” என சுட்டிக்காட்டப்பட்டது.