Breaking
Sat. Dec 6th, 2025

இலங்கையில் ஷரிஆ சட்டம் அமுலில் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர்
ஒருவருக்கும் ஆளுந்தரப்பு எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வருக்குமிடையே கடும் வாக்குவாதம் நேற்று
சபையில் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற காணி (பராதீனப்படுத்தல் மீதான
மட்டுப்படுத்தல்கள்) சட்ட மூலம் இரண்டாம் மீதான விவாத்தில்  எம்.பி. ஒருவர் உரையாற்றிக்
கொண்டிருக்கும் போது இடையிடையே அஸ்வர் எம்.பி. குறுக்கீடு செய்தார்.

இதன்போது எம்.பி,  கழுத்தை அறுக்கும் கைகளை வெட்டும் ஷரி ஆ சட்டம் இங்கு அமுலில் இல்லை
எமது அரசியலமைப்பிலும் அது இல்லை என்றார்.

இதன்போது, குறுக்கிட்ட அஸ்வர் எம்.பி. இஸ்லாம் மதத்தை எம்.பி. அவமதிக்கின்றார்.

இலங்கையில் ஷரி ஆ சட்டம் அமுலில் உள்ளது. அதற்கமையவே காதி நீதிமன்றங்கள் வக்பு சபைகள்
இயங்குகின்றது என்றார்.

Related Post