மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பாதை சீர்கேடுகள் குறித்து அந்த பிரதேச மக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். அமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கையை அடுத்து அவரின் நிதி ஒதுக்கீட்டில் அந்த பிரதேசத்தில் 1கிலோ மீட்டர் நீளமான பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் இணைப்பாளர் எம்.ஜே.எம் முஜாஹிர் இந்த வேலையை ஆரம்பித்துவைத்தார்.இந்த நிகழ்வில் மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் நகுசீனும் கலந்துகொண்டார்.

