வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புணரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம் பெற்ற கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்,வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம் டக் ஜோ (kim duck joo) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொரிய நாட்டின் ஆயிரத்தி அறுநூறு மில்லியன் ரூபா நிதியளிப்பில் புணரமைப்பு செய்யப்படவுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் வேலைகள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் ஆயிரக்;கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படும் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.