Breaking
Sun. Dec 7th, 2025

திரு/கிண்/ முள்ளிபொத்தானை கோட்ட கல்வி பிரிவில் 2015,2016 ஆண்டுகளில் பல்கலைகலகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் விளையாட்டு துறையில் அகில இலங்கை , மாகாண மட்டங்களில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு இன்ற முள்ளிபொத்தானை அல் இ ஹிஜ்ரா மத்திய கலூரியில் இடம்பெற்றது.

இக்கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கிவைத்தார்கள்.

இந் நிகழ்வில் கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் அஹமட் லெப்பை , முள்ளிபொத்தானை கோட்டக்கல்வி அதிகாரி சுபைர் , பாடசாலை அதிபர்கள் , முன்னாள் பிரதேச சபைதலைவர்கள் , உறுப்பினர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள், கலந்துகொண்டனர்.

Related Post