அனுராதபுர மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இஷாக் எம்.பியினால் பல்வேறு திட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து, பதவிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிசோகொட்டுவ மரனாதார அமைப்பிற்கு நேற்று முன்தினம் (10) குடிநீர் வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அத்துடன், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட்ட வல்பொலகம கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், குடிநீர் செயற்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (10)  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஹெரிசன், இஷாக் ரஹுமான் எம்.பி, தாரிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.