முள்ளிப்பொத்தானை அல்_ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் இன்று (15) அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது

கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் இப் பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது
இவ் நிகழ்வில் தம்பலகம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, ரெஜீன் உட்பட டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.