Breaking
Fri. Dec 5th, 2025
 
நிந்தவூர் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில், பிரதேச சபையின் அமர்வு நேற்று (நவம்பர் 30ஆம் திகதி) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
 
இதன்போது, 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டது. இதனை சபையின் சகல உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு, வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
 
இதேவேளை, இந்த அமர்வின் போது, கிண்ணியாவில் படகு விபத்தில் மரணித்தவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டன.
 
மேலும், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் புதிய உறுப்பினராக திருமதி.எம்.ஐ.பசுபிகா, தவிசாளர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
 
 
 

Related Post